Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு

நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு

இந்தியக் கடலோரக் காவல் படை கப்பலான ‘சுஜய்’, நேற்று முன்தினம் இரவு வங்காள விரிகுடா கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது இரவு சுமார் 10 மணியளவில் ‘ஸ்ரீ பாலாஜி’ என்ற மீன்பிடிப் படகிலிருந்து ரேடியோ கருவி மூலம் அவசர அழைப்பு வந்தது. அப்படகு மாமல்லபுரத்திற்கு வடகிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் கோவளம் பகுதியில் இருப்பது தெரிந்ததால் உடனடியாக அங்கு விரைந்த கடலோரக் காவல்படை கப்பலில் இருந்த வீரர்கள், அப்படகை கண்டு பிடித்தனர்.

டிக்கெட் புக்

அப்போது, படகின் அடிப்பகுதியில் ஏற்பட்டிருந்த கடுமையான சேதம் காரணமாக அதன் இயந்திர அறையில் தண்ணீர் புகுந்தது தெரிய வந்தது. படகில் இருந்த 6 மீனவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். கடலில் நிலவிய மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், ஆபத்தில் சிக்கியிருந்த படகில் இருந்த 6 பேரையும் கடற்படை வீரர்கள் மீட்டு சென்னை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்களுக்கு கப்பலின் மருத்துவர் முதலுதவி அளித்தார். இதையடுத்து மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

error: Content is protected !!