டில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. விபத்தின்போது சுமார் 50 மாணவர்கள் கட்டிடத்திற்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 6 மாணவர்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் NDRF குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
