கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் மற்றும் மகள் வீணா ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. தனியார் சுரங்க நிறுவனமான சிஎம்ஆர்எல், விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.2.78 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி விசாரணை தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
