திருச்சி மாவட்டம் துறையூரில் காரில் கடத்திவரப்பட்ட 60 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் கைது.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார்

துறையூர் பெரம்பலூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கீழகுன்னூபட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்றை மடக்கி விசாரிக்க முற்பட்டபோது நிற்காமல் சென்ற காரை போலீசார் லத்தியால் தாக்கியுள்ளனர்.
அப்போது காரின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்துள்ளது.
இதை அடுத்து காரை லாக் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 30 என்ற வாலிபரை கைது செய்தனர் காரில் இருந்து இரண்டு கிலோ பொட்டலங்களாக மொத்தம் 30 பொட்டலங்கள் 60 கிலோ எடையிலான 30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட வாலிபர் கார்த்தி ஒடிசா மாநிலம் பள்ளிகுடா பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வரும்போது துறையூர் பெரம்பலூர் சாலையில் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
