திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (நவ்.3) ஒரே நாளில் 67,300 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 4 லட்சம் வசூலானதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் 22,380 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியதுடன், 3.58 லட்சம் லட்டுகள் விற்பனையாகி, 1.53 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் அருந்திச் சென்றுள்ளனர். இலவச தரிசன வழியில் வந்த பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் ஒரே நாளில் 67 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
