Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் 70 ரவுடிகள் அதிரடி கைது

சென்னையில் 70 ரவுடிகள் அதிரடி கைது

சென்னை மாநகரில் நேற்று இரவில் மட்டும் சுமார் 70 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவொற்றியூர் மற்றும் பெசன்ட்நகரில் அண்மையில் நடந்த கொலை சம்பவங்களை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வியெழுந்தது. இந்த நிலையில், தலைமறைவு குற்றவாளிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதனிடையே முதற்கட்டமாக 70 பேர் கைதாகியுள்ள நிலையில், மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

error: Content is protected !!