திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 76,060 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 32,248 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடி வசூலான நிலையில், 4.56 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. 2.21 லட்சம் பேர் அன்னதானம் பெற்றுள்ளனர். இலவச தரிசனத்திற்காகச் சென்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாகத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
