முதல்வர் ஜோசப் விஜய் 25-11-2026 தலைமையில் கோவளம், தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்-வில் 2-வது வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மற்றும் மாற்று மாநாடு 2026 (VETTRI Tamil Nadu Investment & Conversion Conclave 2026) நடைபெற்றது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் 25-11-2026 தலைமையில் கோவளம், தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்-வில் 2-வது வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மற்றும் மாற்று மாநாடு 2026 (VETTRI Tamil Nadu Investment & Conversion Conclave 2026) நடைபெற்றது. இந்த 2-வது மாநாட்டில் மட்டும் 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. ரூ.58,214 கோடி புதிய முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 65,786 புதிய வேலைவாய்ப்பு கிடைக்கப்படவுள்ளது. மே 2026 முதல் கையெழுத்தான 112 MoU-க்களில் 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு மாறிவிட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கிருஷ்ணகிரி முதல் தூத்துக்குடி வரை, கோவை முதல் ராமநாதபுரம் வரை, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்சாலை, வேலைவாய்ப்பு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-CSE Development India Pvt Ltd – RE துறை: ரூ.8,140 கோடி முதலீடு, 2,000 வேலை – விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், வேலூர், கரூர், தேனி என பல மாவட்டங்கள்
- JM Baxi Ports & Logistics Pvt Ltd – Logistics: ரூ.5,200 கோடி முதலீடு, 7,500 வேலை – பல மாவட்டங்கள்
- Avigna Private Limited – Industrial Park:ரூ.5,000 கோடி முதலீடு, 300 வேலை – கிருஷ்ணகிரி / செங்கல்பட்டு / சென்னை
- Greenbase Industrial & Logistics Park:ரூ.2,650 கோடி முதலீடு, 200 வேலை – செங்கல்பட்டு
-Sanmar Group – Shipbuilding: ரூ.1,950 கோடி முதலீடு, 950 வேலை – தூத்துக்குடி
