ராஜஸ்தானில் இன்று (நவ.2) சாபோலி கிராமத்தில் சாலை கட்டுமானப் பணிக்காக சரளைக் கற்களைக் கலக்கும் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தியபோது, அது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் பாதையில் பட்டது. இதனால் இயந்திரத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்ததில், அங்கிருந்த எட்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலைப் பணியின் போது மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி
