Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஸ்சில் ஆடைக்குள் மறைத்து கருப்பு பணம் கடத்தல்… 14 லட்சம் பறிமுதல்…

கேரளா தமிழக எல்லையான வாளையார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்துகளில் பயணிகளிடம் கேரள போலீசார் பரிசோதனை மேற்கொண்டனர் அப்போது கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த எர்ணாகுளம் அருகே ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ என்பவரை பரிசோதித்த போது அவரது ஆடையில் ரகசிய அறைகள் தயார் செய்யப்பட்டு அவற்றிற்குள் பணம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு சென்றதால் கருப்பு பணம் கடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!