Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

2021ல் அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர்  ராஜேஸ்தாஸ். இவர்  பெண்  எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து , தண்டனைக்கு இடைக்கால தடை பெற்றார் ராஜேஸ் தாஸ்.

இந்த நிலையில் ராஜேஸ் தாசின் மனைவி பீலா வெங்கடேசன்,  கணவரை பிரிந்து வாழ்கிறார். அவரது பங்களா சென்னை  தையூரில் உள்ளது. சில தினங்களுக்கு முன் அங்கு சென்ற  ராஜேஸ் தாஸ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து,  செக்யூரிட்டியை  தாக்கினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் ராஜேஸ் தாசை இன்று  சென்னை  கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.  கேளம்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  ஒரு மாஜி டிஜிபி அந்த மாநில போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!