நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 11.40 லட்சம் non-gazetted ரயில்வே ஊழியர்கள் பயன்பெறும் வகையில், மொத்தம் ரூ.2,009.61 கோடி செலவில் இந்த போனஸ் தொகை வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸாக வழங்க ஒப்புதல்
