Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தஞ்சை அருகே  வல்லம் பசிரா நகரை சேர்ந்தவர் இக்பால் ( 70). இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.‌ இவருடைய மைத்துனர் சையது. இருவரும் சேர்ந்து கடையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

கடந்த 23ம் தேதி இரவு சையது  வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்த சையது, மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் 23 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கடையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!