Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளச்சாராய சாவு ….. திருச்சியில் தமாகா ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் இதுவரை  50 க்கு மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம்  முழுவதும் அதிமுக,  பாஜக  உள்ளிட்ட  கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விவசாய அணி சார்பாக விவசாய அணி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விஷச்சாராயம் விற்றவர்களை கைது செய்ய வேண்டும் மேலும் காவல்துறை ,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் மெத்தனப் போக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கொண்டு விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும், கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி் கண்டன கோஷங்களை எழுப்பினர் தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!