Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்னா மாவட்டம் கட்வஞ்சி கிராமம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பிவிட்டு கார் நெடுஞ்சாலையின் எதிர்திசையில் சென்றுள்ளது. அப்போது அதே சாலையில் வேகமாக வந்த கார் எதிரே வந்த கார் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!