திருமயம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த்குமார் மற்றும் ஸ்ரீசந்திரசேகர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தவெக வேட்பாளர் சிந்தாமணி தொடர்ந்த இத்தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றமும் இம்மனுவை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி
