திருப்பத்தூர் மாவட்டம், புதூர் நாடு மலைப்பகுதியில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட முயன்ற நபர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது தம்பி தங்கைகளுடன் வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து இளம்பெண் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புதூர் நாடு தகரக்குப்பம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் குரங்குகாளி (43) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் விசாரணையில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் போலீசார் விசாரணையில் அம்பலமானது.
மேலும் குரங்குகாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
