Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூர் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு–போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பெரிய ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களின் உதவியுடன் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்த பாரூக் பாஷா மகன் அயாஸ் (21) என்பது தெரியவந்தது.

அயாஸ் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழந்தாரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சடலம் மீட்கப்பட்டதால் ஏரிக்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

error: Content is protected !!