Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக பெரம்பலூருக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வேனை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கலஞ்சேரியை சேர்ந்த குமரவேல்(21) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்தானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் குமரவேல் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் வைக்கோல் கட்டுகள் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன்  மிஷின் மூலம் சரக்கு வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!