Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டை… மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபரகணங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளிடமும், பொதுமக்களிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார். மேலும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!