திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக
இந்த ஆய்வின்போது மேயர் அன்பழகன் தெரிவித்ததாவது: மாநகரில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் , தண்ணீர் ஏற்றக்கூடிய குடிநீர் வால்வு தொட்டிகளையும் 15 நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும், தினந்தோறும் வார்டு பகுதி மற்றும் தெருப் பகுதிகளில் தண்ணீர் வரும்போது அதனை ஆய்வு செய்யவும்,பொதுமக்கள் புகார் தெரிவித்தவுடன் உடனடியாக அப்பகுதியில் சென்று துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் இடங்களில் தினந்தோறும் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மேயர் மு.அன்பழகன் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இது ஆய்வில் செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்பிரமணியன் ,இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரசாந்த் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.
