Skip to content

ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன்மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில்  ரூ.525 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாார்.   அவருடன் மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து சென்னை அழைத்து  சென்றனர்.

சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தேவநாதனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று மோசடி வழக்கில் தேவநாதன், குணசீலன், மகிமைநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  3 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டான்ஃபிட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!