Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவெறும்பூரில் 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளவும். எரிவாயு நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம்   திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 28.01.2023 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது, கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி தலைமை தாங்குகிறார்.

இக்கூட்டத்தில் திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவெறும்பூர் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்  கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை  கூறி  நிவாரணம் பெறலாம் என திருச்சி மாவட்ட  மா.பிரதீப் குமார்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!