Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெறிநாய்த் தொல்லை….கரூர் அருகே பொதுமக்கள் நூதன போராட்டம்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில் தெரு நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு .மாடு. கோழி போன்ற பிராணிகளை கடித்து குதறி விடுகிறது. அதேபோன்று குழந்தைகளையும் வெறிநாய் கடித்துவிடுகிறது.  இதனால் பொதுமக்கள்  அச்சமடைந்துள்ளனர்.

நாய்களை கட்டுப்படுத்த கோரி பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்து இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து இன்று சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த கோரி அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆடு, மாடு, கோழி ஆகிய பிராணிகளை ஒப்படைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்குகாவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், பொதுமக்களுடன் வட்டாட்சியர் வெங்கடேஷ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதனால் அவர்கள் சமாதானமடைந்து திரும்பி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!