Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

வாழும் கலை அமைப்பின்  நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் 4 பேர் இன்று காலை  பெங்களூருவில் இருந்து தனியார்  ஹெலிகாப்டரில் திரிபுரா மாநிலத்துக்கு  புறப்பட்டனர்.  ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர் அவசரமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்கு திருப்பப்பட்டு, அங்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. காலை 10.40மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.  1 மணி நேரம் அங்கு இருந்த ரவி சங்கர் வானிலை சீரானதும் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!