Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவிகளிடம் சில்மிஷம்…. திருச்சி அரசு டாக்டர் போக்சோவில் கைது

திருச்சி மேலப்புதூரில் டிஇஎல்சி  தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு  பள்ளியுடன் இணைந்து  மாணவ, மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர்  கிரேசி. இவரது மகன் சாம்சன்(31)  அன்பில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக உள்ளார். திருமணமாகாதவர்.

இவர் அடிக்கடி இந்த குழந்தைகள் விடுதிக்கு வருவாராம். அங்குள்ள மாணவிகள் சிலரிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அந்த குழந்தைகள் தங்கள் பெற்றோர், பாதுகாவலர் மூலம் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியிடம் புகார் செய்தனர்.

மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி  கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமிகள் தங்கியுள்ள விடுதிக்கு சென்று ஒவ்வொரு  சிறுமியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டர் சாம்சன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து டாக்டர் சாம்சனை  போக்சோ சட்டத்தில் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். சாம்சன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!