Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழைநீரைத் தடுக்க கதவை மூடச் சொன்ன பயணி ஓடும் ரயிலில் கத்தியால் குத்திக் கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மயங்க் லோகர் (22) என்ற வாலிபர் மும்பையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு சர்ச்கேட்டில் இருந்து நாலாச்சோப்ரா நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்துள்ளார். ரயில் அந்தேரி நிலையத்தைத் தாண்டி போரிவிலி நோக்கிச் சென்றபோது பலத்த மழை பெய்ததால், வாசல் வழியாக மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால் கதவருகே நின்ற மயங்க் லோகர், அங்கிருந்த மற்றொரு பயணியிடம் கதவை மூடுமாறு கூறியுள்ளார்.

அதற்கு அந்த நபர் மறுக்கவே, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பயணிகள் சமாதானம் செய்ய முயன்றும் ஆத்திரமடைந்த அந்த நபர், தன் பையிலிருந்த கத்தியை எடுத்து மயங்க் லோகரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த வாலிபரை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஓடும் ரயிலில் அரங்கேறிய இந்த கொடூரக் கொலை மும்பை பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய கொலையாளியை இன்று மாலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

error: Content is protected !!