Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அருப்புக்கோட்டை….. பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்

விருதுநகர் மாவட்டம்  திருச்சுழியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. கொலை செய்யப்பட்டவரின் உடல்  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் உடலை பெற்றுக்கொள்ளமாட்டோம் என ஒருதரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது  டிஎஸ்பி  காயத்ரி தலைமையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.   திடீரென போராட்டக்காரர்கள் முன்னேறினர். அவர்களை போலீசார் தடுத்தபோது ஒருவர்,  டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்தார். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.  டிஎஸ்பியை தாக்கியதாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.  சம்பவ இடத்துக்கு எஸ்.பி.  கண்ணனும் வந்து விசாரணை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!