தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி & கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி & கிருஷ்ணகிரியில் கனமழை பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி & காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மே.24 வரை மழை நீடிக்குமாம்.
