Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை.. உயிர் தப்பிய 6வயது மகன்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் அருண்(30). இவருக்கு மனைவி லட்சுமி (25) தர்ஷன் (6), நிஷாந்த் (4) மகன்கள் இருந்தனர். அருண் தனது குடும்பத்தினருடன் தற்போது மேலசுக்காம்பட்டியில் உள்ள சுப்ரமணி என்பவர் தோட்டத்தில் தண்ணீர் தண்ணீர் பாய்ச்சி கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தனது இரு மகன்களை தோட்டத்தில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு லட்சுமி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் லெட்சுமி மற்றும் நிஷாந்த் நீரில் மூழ்கி பலியாகினர். தர்ஷன் மட்டும் கிணற்றின் மோட்டார் தொங்கவிட்ட கயிற்றினை பிடித்து தப்பியுள்ளார்.  3 மணி நேரமாக கயிற்றினை பிடித்தவாறு கூச்சலிட்டு வந்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் நபர் எதேர்ச்சையாக கூச்சலிடும் சத்தம் கேட்டு கிணற்றில் வந்து பார்த்தபோது தர்ஷன் கயிற்றை பிடித்தவாறு இருந்ததை கண்டு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து திருச்சி தீயணைப்புத் துறையினர் மற்றும் குளித்தலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட தர்ஷன் அருகிலுள்ள இனுங்கூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருவரது உடல்களையும் கைப்பற்றிய குளித்தலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!