இரட்டைக் கொலை வழக்கில் மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக குருமூர்த்தி அவரது நண்பர் தினேஷ் ஆகிய இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம்

தொடர்பாக நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி, ரமேஷ், நெப்போலியன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இரட்டை ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
