Skip to content

ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.  பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விட்டு தருவோம் இல்லையேல் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இடைத்தேர்தலில் மேனகா போட்டியிடுவார் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!