சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி அருகே 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் தனுஷ் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் பள்ளிக்கு அருகிலேயே அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவத்தால் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமும் பதற்றமும் நிலவுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் +2 மாணவன் அடித்துக்கொலை… பரபரப்பு
