Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பயணியொருவர் தனது உடைமைகளுக்குள் 353 கிராம் தங்க நகைகளை மறைத்து கொண்டு வந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள் பயணியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல மற்றொரு விமானத்தில் வந்த பயணி எரிவாயு உருளை ரெகுலேட்டருக்குள் மறைத்து 300 கிராம் தங்கத்தை கொண்டு வந்தது தெரிய வந்தது. அவற்றையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாணை மேற்கொண்டுள்ளனர்.பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 27.19 லட்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!