Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

திருவெறும்பூர் அருகே உள்ள கிழகுறிச்சி பேன்சி நகரை சேர்ந்தவர் கண்ணன் (56)இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் வீல் ஷாப் பிரிவில் சீனியர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் இந்நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் வீடு திரும்ப வில்லை என்றும் பல இடங்களில் கண்ணனை தேடியும் கிடைக்கவில்லை என அவரது மனைவி குமாரி (51 )திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!