Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம்….அவசரமாக தரையிறக்கம்

தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று கன்னியாகுமரியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம்  தூத்துக்குடி சென்று அங்கிருந்து காரில் கன்னியாகுமரி செல்ல இருந்தார்.   தூத்துக்குடி , நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்றும்  கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது.  அங்கிருந்து அமைச்சர் எ.வ. வேலு காரில் கன்னியாகுமரி  புறப்பட்டு சென்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!