Skip to content

அரியலூர்…….. 28 பேருக்கு பணிநியமனம்……. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

அரியலூர் அரசு போக்குவரத்து கழக  பணிமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கரூர் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களில் பணிபுரிந்த காலத்தில் இறந்த பணியாளர்களின் 28 வாரிசுதாரர்களுக்கு( 2 ஓட்டுனர், 25 நடத்துனர் ,4 மகளிர் உட்பட ,1 தொழில்நுட்ப பணியாளர் ) கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை  போக்குவரத்து துறை அமைச்சர்  சா. சி .சிவசங்கர்  இன்று வழங்கினார்.

தொடர்ந்து அரியலூர் பழைய பேருந்து நிலையத்தில் 2 புதிய புறநகர பேருந்துகள் அரியலூர் -சென்னை கிளாம்பாக்கம் (வழி) குன்னம், வேப்பூர் மற்றும் அரியலூர்- சென்னை கிளாம்பாக்கம் (வழி )குன்னம், பெரம்பலூர் வழித்தடத்தினை  போக்குவரத்து துறை அமைச்சர் . சா .சி .சிவசங்கர்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் . பொ. ரத்தினசாமி  ,அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்  கு. சின்னப்பா ,கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் . இரா .பொன்முடி அவர்கள், திருச்சி மண்டல பொது மேலாளர் திரு .ஆ .முத்துகிருஷ்ணன் அவர்கள், பொது மேலாளர் (கூட்டமை தொழில்நுட்பம்) திரு. சிங்கார வேலன், துணை மேலாளர்கள் திரு. ரங்கராஜன், (மனிதவள மேம்பாடு) சுவாமிநாதன்,(தொழில்நுட்பம்) ,சுரேஷ் குமார்(வணிகம்) , ராமநாதன் (வணிகம் கூட்டாண்மை), ரவி (பணியாளர், சட்டம்)பரத் குமார்(பணியாளர் சட்டம்)மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து கழக பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!