Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 13.69 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை வியட்நாம் தோஹா கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை மும்பை ஹைதராபாத் டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது..

சர்வதேச நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வரும் விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
ரகசிய தகவலின் அடிப்படையில்
விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்பொழுது (வாட்டர் டேப்) குழாய்களில் மறைத்து வைத்து கடத்தி வந்த 13 லட்சத்து 69ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள 180 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!