Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

 

திருச்சி  ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் நேரு தெரு,  சாத்தார வீதி பூ மார்க்கெட், மேலூர் அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கஞ்சா விற்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாலக்கரை பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக சதீஷ்குமார் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!