Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு- மக்கள் கடும் பாதிப்பு

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு- மக்கள் கடும் பாதிப்பு

அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார் . தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக கூறிய உதயநிதி, அத்தியாவசிய பொருட்களின் விலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் மளிகை கடை பக்கம் போவதையே நிறுத்தி உள்ளதாக குறிப்பிட்டார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக முதல்வர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரான எடப்பாடி பழனிசாமி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அரிசி, சர்க்கரை, மஞ்சள், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக அரிசி விலை ரூ.20, சர்க்கரை விலை ரூ.30 வரை உயர்ந்துள்ளது. மேலும் மஞ்சள், மிளகாய் விலைகளும் உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை சமீபகாலமாக உயர்ந்து வருகிறது, இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

error: Content is protected !!