Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ. கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவிப்பு.

திருப்பூர் மாவட்டம். உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 87.37 அடியாக உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அமராவதி ஆற்றில் 36,000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக நீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ. கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!