Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லி சென்றார் அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச் செயலரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்த், துரைமுருகனின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதைன நடத்தினர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டையில் உள்ள கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது நாளாக விடிய விடிய அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை இன்று அதிகாலை முடிவடைந்தது. இந்த நிலையில், சென்னையில் இருந்து நேற்று இரவு 10 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் டெல்லி சென்றனர்.  தமிழக அரசுமுறைப் பயணமாக துரைமுருகன் தில்லிக்கு சென்றுள்ளாரா? அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றுள்ளாரா?  என்கிற விபரம் தெரியவில்லை..

error: Content is protected !!