Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இஸ்ரோ தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமனம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம்  வரும் 13ம் தேதி முடிவடைய உள்ளது.14 ஜனவரி 2022 அன்று  சோம்நாத் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமித்து மத்திய அரசின் நியமனக்குழு அறிவித்துள்ளது.

இஸ்ரோவின் அடுத்த தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள வி.நாராயணன், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் . இவர் திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சியின் இயக்குனரக பணியற்றியுள்ளார். வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரையில் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!