Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டின் பூட்டை உடைத்து- 13 பவுன் நகை, பணம் கொள்ளை….. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி எல்ஐசி காலனி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி.இவரது மனைவி லீலாவதி (75). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜன.4-ந் தேதி தனது உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், நேற்று காலை வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 13.5 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!