Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் கிருஷ்ணா சாமிதரிசனம்….

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் கழுகு படம் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

கோவிலுக்குள் சென்ற அவர் மூலவர் முருகன், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி

ஆகியோரை வணங்கினார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் கிருஷ்ணாவுடன் பக்தர்கள், பொதுமக்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அதன் பின் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். கடந்த வருடம் நடிகர் கிருஷ்ணா நடித்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தது வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!