Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீஸ் மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்…

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். அவர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரகுமான் வரையிலான பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். பக்தி பாடல்களையும், தனி ஆல்பங்களையும் அவர் பாடியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு சார்பில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வாணி ஜெயராம் உடலுக்கும் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. 3 தேசிய விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற வாணி ஜெயராம் உடலுக்கும் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பெசன்ட் நகர் மின்மயானத்தில் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!