Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலா.

மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளிக்கிறார்.

இந்த நிலையில் இன்று சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தார். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற வெள்ளி கருட வாகன திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!