Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உடல் நலம் தேறினார் போப்- புதிய புகைப்படம் வெளியீடு

உலக  கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்  போப் பிரான்சிஸ்.   இவர் இத்தாலியில் உள்ள வாடிகன்  நகரை தலைமையிடமாக கொண்டு  செயல்படுகிறார்.  கடந்த மாதம் அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவர் உடல்நலம் தேறி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது  படம் வெளியிடப்பட்டுள்ளது.  பலிபீடத்தின் முன்  போப் பிரான்சிஸ் அமர்ந்து இருக்கும் இந்த புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம்  வெளியிட்டுள்ளது.

ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதிரியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாகவும்  வாடிகன் நிர்வாகம்  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!