Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையிலான விவசாயிகள் கையில் வேலி கருவ முட்செடிகளை கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் உள்ள ஏரிகளிலும் குளங்களிலும் உள்ள வேலி கருவை முள் செடிகளை அகற்ற வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டும் இதுவரை 50% கூட ஏரிகளிலும் குளங்களிலும் உள்ள வேலி கருவை முள் செடிகளை அகற்றவில்லை எனவே நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மாவட்டத்தில் உள்ள 178 ஏரிகளையும் குளங்களையும் ஆய்வு செய்து வேலி கருவை முள் செடிகளை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு விட வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!