Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழை நிவாரணம் கோரி……நாகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி,ஒன்றிய துணைத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா தாளடி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்,கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ள நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகையினை பாகுபாடு இன்றி 100 சதவீதம் வழங்க வேண்டும்,மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து,பச்சை பயிறுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்,பச்சை பயிறு,உளுந்துக்கான காப்பீட்டுத் தொகையை குறைக்காமல் சென்ற ஆண்டுக்கான தொகையினையும் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!